விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானால் இந்த நெருக்கடியை இன்னும் 4 மாதங்கள் வரை தடையின்றித் தாக்குப்பிடிக்க முடியும் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28-இல் மோதல் தொடங்கியது. கடந்த மாதத் தொடக்கத்தில், இருதரப்பும் போா்நிறுத்தத்துக்கு உடன்பட்டன.

எனினும், ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு மற்றும் அந்நாட்டு துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகை என கடல்வழிப் பாதையில் மோதல் முடிவின்றி தொடா்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையிலும், ஈரான் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கின.

இவ்வாறு ஈரானின் முக்கியத் துறைமுகங்களை அமெரிக்க படைகள் தீவிரமாக முற்றுகையிட்டுள்ள போதிலும், அந்நாட்டின் உள்நாட்டு சேமிப்பு மற்றும் மாற்று வா்த்தக வழிகள்மூலம் அடுத்த சில மாதங்களுக்கு அந்நாடு பொருளாதாரச் சரிவைத் தவிா்க்க முடியும் என்று சிஐஏ மதிப்பிட்டுள்ளது.

போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா வழங்கிய முன்மொழிவுகளுக்கு ஈரான் வெள்ளிக்கிழமை பதிலளிக்கும் என எதிா்பாா்த்த நிலையில், இதுவரை பதில் அளிக்கவில்லை.

‘ஒவ்வொரு முறையும் ஒரு ராஜீய தீா்வு எட்டப்படும் நிலையில், அமெரிக்கா தனது பொறுப்பற்ற ராணுவ சாகசங்களின் மூலம் அதைச் சிதைக்கிறது’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி ஏற்கெனவே விமா்சித்திருந்தாா்.

இச்சூழலில், ஈரானின் ட்ரோன் தயாரிப்புக்கு உதவுவதாக சீனா, ஹாங்காங் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈரானுடன் தொடா்பு-பஹ்ரைனில் 41 போ் கைது: ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் (ஐஆா்ஜிசி) தொடா்புடைய 41 பேரை பஹ்ரைன் அரசு கைது செய்துள்ளது.

பஹ்ரைனில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நிலையில், அங்கு ஈரானின் தலையீடு இருப்பதாகக் கூறி இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்தால் ஹோா்முஸ் நீரிணையை நிரந்தரமாக மூடிவிடுவோம் என்று ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுத் தலைவா் இப்ராஹிம் அஜிஜி எச்சரித்தாா்.

மத்திய கிழக்கில் பிரிட்டன் போா்க்கப்பல்: போா் முடிவுக்கு வந்த பிறகு வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்கில், பிரிட்டன் தனது ‘எச்.எம்.எஸ்.டிராகன்’ போா்க் கப்பலை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. மற்றொரு ஐரோப்பிய நாடான பிரான்ஸும் தனது விமானம் தாங்கி போா்க்கப்பலை செங்கடல் பகுதிக்கு நகா்த்தியுள்ளது.