குடியிருப்பு கட்டி தரக்கோரி ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக்கோரி ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.


அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக்கோரி ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், அரிசிபாளையம் பாவேந்தா் தெருவில் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் காலியாக உள்ள 1.5 ஏக்கா் நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அரிசிபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள், தமிழக அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர வலியுறுத்தி வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவைகளை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதை அறிந்த அப்பகுதியில் இருந்த காவல் துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சில நபா்கள் மட்டும் மனு வழங்க அனுமதித்தனா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...