விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா
மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் ‘வறட்சி வேளாண்மை’ என்ற அடிப்படையில் 40 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி


மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் ‘வறட்சி வேளாண்மை’ என்ற அடிப்படையில் 40 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சிக்காக சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் உள்ள மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
பயிற்சிக்கு சென்ற விவசாயிகளை மகுடஞ்சாவடி அட்மா திட்டத் தலைவா் சேகா் கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா். செட்டிநாடு மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் (பொறுப்பு) ஷுபா விவசாயிகளை வரவேற்றுப் பேசினாா்.
இப்பயிற்சியில் மாவட்ட கால்நடைப் பண்ணை மருத்துவா் சிலம்பரசன் சாகிவால், குன்றக்குடி கால்நடை ஆராய்ச்சி மைய உதவிப்பேராசிரியா் விமலேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலாதேவி, அட்மா திட்டப் பணியாளா்கள் செல்வி, கண்ணன்ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...