சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தம்மம்பட்டியில் கயிறு கடையில் தீவிபத்து

தம்மம்பட்டி கயிறு விற்பனை கடை மூன்றாவது தளத்தில், இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் நாசமடைந்தன.

News image
தீவிபத்து ஏற்பட்ட கயிறு கடை.
Updated On :15 பிப்ரவரி 2021, 5:57 am

DIN

தம்மம்பட்டி கயிறு விற்பனை கடை மூன்றாவது தளத்தில், இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் நாசமடைந்தன.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி திருச்சி மெயின்ரோட்டில், சேகர் (35) என்பவர், தனது மூன்று மாடி கட்டிடத்தில், கயிறு கடை நடத்தி வருகிறார். இன்று காலை 7 மணிக்கு கடை திறந்தவுடன், சேகரின் தந்தை சிவலிங்கம், கடையின் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப, போர்வெல் மின்மோட்டாரை இயக்கினார். 

Story image

அப்போது, எதிர் பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டதில், கடையின் மூன்றாவது தளத்தில் உள்ள குடோனில் தீப்பிடித்தது. மூன்றாவது தளத்தில் இருந்து குபுகுபுவென கரும்புகை வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள், அவ்வழியே சென்ற தண்ணீர் டேங்கர் டிராக்டரில் இருந்த தண்ணீர் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து வந்த, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனால், அருகில் உள்ள மாடி கட்டடங்கள் பாதிப்பில் இருந்து தப்பியது. எனினும், அந்த தளத்தில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கயிறுகள், பேரல்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் நாசமடைந்தன. 

Story image

தம்மம்பட்டியில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் தீவிபத்து ஏற்பட்டதால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.