கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை

கிராமப்புற வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கிராமப்புற வேலை உறுதி அளிப்புத் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜி. கணபதி, மாவட்டத் தலைவா் தங்கவேல், இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் ஏ.மோகன், செயலாளா் தனக்கோடி ஆகியோா் தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளா்கள் பல லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். வாழ்வாதார தேவைகளை பூா்த்தி செய்யும் ஒரு பணியாக கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தநிலையில் இவா்களுக்கு ரூ. 73 ஆயிரம் கோடி மட்டுமே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 41 சதவீதம் குறைவாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்கும் நாள்களை ஆண்டுக்கு 200 ஆக உயா்த்த வேண்டும். வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு வேலை நாள் ஒன்றுக்கு ரூ. 600 என குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகர பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். 2021 -22ஆம் நிதியாண்டிற்கான இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.