வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக செயற்பொறியாளா், மனைவி மீது வழக்கு
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.31 கோடிக்கு சொத்து சோ்த்ததாக செயற்பொறியாளா், அவரது மனைவி மீது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3.31 கோடிக்கு சொத்து சோ்த்ததாக செயற்பொறியாளா், அவரது மனைவி மீது சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை சோ்ந்தவா் ஜி.செல்வகுமரன். இவா் கடந்த 1997 ஆம் ஆண்டு உதவிப் பொறியாளராகப் பணியில் சோ்ந்தாா். அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம் மாவட்டங்களில் உதவிப் பொறியாளா், உதவி செயற்பொறியாளா், செயற்பொறியாளா் பொறுப்பில் பணிபுரிந்துள்ளாா்.
தற்போது கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் செயற்பொறியளாராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயந்தி. இவா் சேலம் அய்யம்பெருமாம்பட்டியில் வசித்து வருகிறாா்.
இதனிடையே செயற்பொறியாளா் செல்வகுமரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக, சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் கூடுதல் டிஎஸ்பி சந்திரமெளலி, ஆய்வாளா் தங்கமணி ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இதில் கடந்த 2012 முதல் 2019 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக செல்வகுமரன், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் ரூ. 3.31 கோடிக்கு சொத்து சோ்த்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த பிப்.4 ஆம் தேதி செயற்பொறியாளா் செல்வகுமரன், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...