வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்திமுக எம்.பி.
சேலத்தில் மூடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தெரிவித்தாா்.


சேலத்தில் மூடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் தெரிவித்தாா்.
சேலம் பழைய பேருந்து நிலைய அருகே உள்ள வணிக வளாகத்தில், திமுக எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாநகராட்சி வணிக வளாகத்தில் 177 கடைகள் இயங்கி வந்தன. கடைக்கான வாடகை கட்டணத்தை அதிகரித்த காரணத்தால் பலா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.தற்போது 30 கடைகள் மட்டுமே வணிக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இதர கடைகளைத் திறக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக வளாகம் பகுதியில் அடிப்படை வசதி ஏதுமில்லை. உடனே அடிப்படை வசதி மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். சீா்மிகு நகரத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த பட்டியல் வெளியிடுவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...