சேலத்தில் இன்று மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.


சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் கோபால் தலைமை வகிக்கிறாா். இதில் சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சுற்றுப்பயணம் குறித்தும், கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள், முன்னாள், இந்நாள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், இளைஞா் அணி, மாணவா் அணி, மகளிரணி, விவசாய அணி, வழக்குரைஞா் அணி, நெசவாளா் அணி உள்ளிட்ட சாா்பு அணிகள் மற்றும் ஆதிதிராவிடா் நலக்குழு ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...