காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எடப்பாடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் போல் நடித்து தங்க நகை கொள்ளை

எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்போல் நடித்து, வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

News image

எடப்பாடியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் போல் நடித்து தங்க நகை கொள்ளை

Updated On :17 பிப்ரவரி 2021, 1:40 pm

DIN

எடப்பாடி அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்போல் நடித்து, வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட வெள்ளாண்டிவலசு, புதிய தெருப் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜி(67). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்திவருகிறார். கோவிந்தராஜின் குடும்பத்தினர் மளிகை கடையினை கவனித்துகொள்வது வழக்கம்.

இந்நிலையில் புதன்கிழமை கோவிந்தராஜின் மனைவி மஞ்சுளாவும், மகன் ரமேஷும் மளிகை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அப்போது மதிக்கத்தக்க தோற்றம் கொண்ட நபர் ஒருவர், கடையில் இருந்த ராமேஷிடம், புகையிலை வாங்க வந்துள்ளார்.

இதனையடுத்து கடையின் உள்ளே சென்ற ரமேஷ் அந்த நபர் கேட்ட புகையினை பொட்டலதை கொண்டுவந்து கொடுத்துள்ளார். அதனை கையில் வாங்கிப் பார்த்த அவர், தான் உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து வியாபாரம் செய்வது குற்றம் என கூறி, கடை மற்றும் கடையினை ஒட்டியுள்ள வீட்டில் சோதனை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் கடையில் சோதனை மேற்கொண்ட மர்ம நபர், அதனை ஒட்டி இருந்த வீட்டிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறி  அருகில் இருந்த
வீட்டினுள் நுழைந்துள்ளார். அங்கு சமையல் அறையில் இருந்த, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்த பீரோவை திறக்கச் சொல்லி சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றதால் அபராதம் விதிப்பதாகக் கூறி அதற்கு ரூ.1000 பணம் எடுத்து வரும்படி கூறியுள்ளார். பணம் எடுக்க ரமேஷ் அருகில் இருந்த கடைக்குள் சென்ற நிலையில், அந்த நபர் பீரோவின் ஒரு பகுதியில் இருந்த தங்கநகைகளை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.

திரும்பி வந்த ரமேஷிடம் அபராதத் தொகையினை பெற்றுக்கொண்ட நபர், இனி இதுபோல் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது
என கூறி எச்சரித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த நபர் சென்ற சிறிது நேரத்திற்கு பின், கோவிந்தராஜி குடும்பத்தினர், பீரோவில் இருந்த பொருட்களை
சரிபார்த்துள்ளனர்.

அப்போது, சுமார் 20 சவரன் தங்கநகைகள் காணவில்லை எனக் கூறி இதுகுறித்து  காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட எடப்பாடி காவல்துறையினர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.