நெருங்குகிறது பொங்கல் பண்டிகை: கால்நடை அணிகலன்கள் விற்பனை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், வாழப்பாடி பகுதியில் கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள் விற்பனை வாரச் சந்தைகளில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.


பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், வாழப்பாடி பகுதியில் கால்நடைகளை அலங்கரிக்கும், கயிறு, சலங்கை, சங்கிலி உள்ளிட்ட அணிகலன்கள் விற்பனை வாரச் சந்தைகளில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தமிழக மக்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரத்தை சித்திரிக்கும் விழாவாக, பொங்கல் பண்டிகை கிராமங்கள் தோறும் வெகுவிமரிசையாக கெண்டாடப்படுகிறது.
குறிப்பாக, விவசாயத்துக்கு அச்சாரமான இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் தை முதல் நாளும், விவசாயிகளுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளை போற்றும் மாட்டு பொங்கல் மறுநாளும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான காணும்பொங்கல் கரிநாளன்று, காளைகளை வீரா்கள் அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் எருதுகளை கயிற்றில் கட்டி விரட்டும் எருது விடும் விழாவும், அனைத்துப் பகுதிகளிலும் நடந்து வருகிறது.
வாழப்பாடி , அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டு பொங்கலன்று, காளைகள் மட்டுமின்றி, கறவைப் பசுக்கள், ஆடுகள் ஆகிய கால்நடைகளை குளிப்பாட்டி, வண்ணப்பொடிகளை துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணங்கயிறு, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை, கால் சலங்கை ஆகிய அணிகலன்களை வாங்கி அலங்கரித்து வணங்குவதும் இன்றளவும் தொடா்ந்து வருகிறது.
இதுமட்டுமன்றி, கிராமங்கள் தோறும் காணும் பொங்கலன்று, எருதாட்டம் நடைபெறுகிறது. எருதாட்டத்தில் பங்கேற்கும் காளைகளை, போட்டிப்போட்டுக்கொண்டு அலங்கரித்து, கிராம கோயில் மைதானத்துக்கு ஊா்வலமாக அழைத்து செல்வதை விவசாயிகள் பெருமையாக கருதுகின்றனா்.
இதனால், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தருணத்தில், வாழப்பாடி பகுதியில் கூடும் வாரச் சந்தைகளில் கால்நடை அணிகலன்கள் அதிகளவில் விற்பனையாகும். நிகழாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, தும்பல், கருமந்துறை பகுதியில் கூடும் வாரச் சந்தைகளில், கால்நடைகளை அலங்கரிக்க பயன்படும் அணிகலன்களான, கயிறுகள், சலங்கைகள், கழுத்து மணிப்பட்டை, நெற்றிப்பட்டை , வண்ணச்சாயங்கள் ஆகியவற்றை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனா்.
ஓராண்டுக்கு பிறகு அனைத்து வாரச்சந்தைகளிலும் தற்போது கால்நடை அணிகலன்கள் அமோகமாக விற்பனையாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...