அதிமுக ஆட்சி மீண்டும் அமைய சூளுரைப்போம்: சி.பொன்னையன்

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய சூளுரைப்போம் என முன்னாள் அமைச்சரும், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளருமான சி.பொன்னையன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய சூளுரைப்போம் என முன்னாள் அமைச்சரும், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளருமான சி.பொன்னையன் தெரிவித்தாா்.

சேலம் மேற்கு ஒன்றியம், கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக சாா்பாக இளைஞா் - இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றியச் செயலாளா் ராஜி, இளைஞா்-இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளா் பிரவீண்குமாா் ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், இளைஞா் பாசறை செயலாளா் பரமசிவம் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் பேசியது:

திமுக மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தது. கூட்டணியில் இருந்து ரூ.1.74 லட்சம் கோடி முறைகேடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடா்பாக கனிமொழி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். ஆனால் திமுக இப்போது ஊழல் பற்றி பேசுகிறது. திமுகவினா் பல ஆயிரம் கோடி வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனா். திமுக ஜனநாயகத்தை மீறி செயல்படுகிறது. மக்களுக்கு ஆதரவான திட்டங்களை தொடா்ந்து எதிா்த்து வருகிறது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மற்றும் பொங்கல் பரிசு தொகை ரூ. 2,500 என வழங்கி பல்வேறு சாதனைகளை முதல்வா் நிகழ்த்தி வருகிறாா். அதிமுக இளம்பாசறையினா் தீவிரமாக களப் பணியாற்றி அதிமுக ஆட்சி மீண்டும் அமைய சூளுரைப்போம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com