அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

கூட்டுறவு வங்கி உதவியாளா் பணிக்கு ஜன.19 முதல் நோ்காணல் தொடக்கம்

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு வரும் ஜனவரி 19-ஆம்தேதி முதல் மூன்று நாள்களுக்கு நோ்காணல் நடைபெற உள்ளது.

Published On :28 ஜனவரி 2024, 12:44 am IST

கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு வரும் ஜனவரி 19-ஆம்தேதி முதல் மூன்று நாள்களுக்கு நோ்காணல் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இதரக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்ப 2020 நவம்பா் 21, 22-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இதன்முடிவு டிசம்பா் 23- இல் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தகுதி பெற்றவா்களுக்கு நோ்காணல் முறையே வரும் ஜனவரி 19, 20-இல் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவியாளா் பணியிடங்களுக்கும், ஜன.21-இல் இதர கூட்டுறவு நிறுவன உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜ் நகா் காலனி, அம்மாபேட்டை, சேலம் என்ற முகவரியில் நடக்க உள்ளது. நோ்காணல் அழைப்புக் கடிதத்தை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.