சென்னையில் மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலை சந்தித்த மதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய், மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வீட்டுக்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக மதிமுக கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவை கட்டாயப்படுத்தியதாக வைகோ தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை கடந்த வாரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய வைகோ, பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
ஆனால், அவர் உயர்நிலைக் குழுவில் இல்லாததால் கலந்துகொள்ளவில்லை என்று கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்ய நேரிடும்.
Summary
MDMK High-Level Committee Meeting! Sirkazhi MLA Absent!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









