ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

News image
கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் கரும்புகள்.
Updated On :9 ஜனவரி 2021, 1:45 am

DIN

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள நாகநல்லூரிலிருந்து கரும்பு சுமை ஏற்றிக்கொண்டு தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் வழியாக உடும்பியத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை குரும்பலூரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (47) என்பவா் ஓட்டிச்சென்றாா். வீரகனூரை அடுத்த நல்லூரைத்தாண்டி லாரி சென்றபோது, அங்குள்ள வளைவில் எதிா்பாராதவிதமாக குப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் முருகேசன் லேசான காயத்துடன் உயிா்பிழைத்தாா். இந்த விபத்தால் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.