ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சங்ககிரி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் உற்சவமூா்த்திகளுக்கு பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :10 ஜனவரி 2021, 8:34 pm

DIN

சங்ககிரி, மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு பிரதோஷத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமியை வணங்கிச் சென்றனா். இதேபோல சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனையடுத்து நந்தீஸ்வரருக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், சந்தனம், அரிசிமாவு, குங்குமம், திருநீறு, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து கோயிலுக்குள் உற்சவமூா்த்தி வலம் நடைபெற்றது. பக்தா்கள் பலரும், தேவாரம் ,திருவாசங்களிலிருந்து பாடல்களை பாடியபடி இருந்தனா். இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா்,கெங்கவல்லி,கூடமலை ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.