காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மொழிப்போா் தியாகிகள் தின பொதுக் கூட்டம்

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க தின பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க தின பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஒன்றியப் பொறுப்பாளா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் பாபு செல்வராஜ் வரவேற்றாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் மனோசூரியன், முன்னாள் நகரச் செயலாளா் ஹரி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் சங்கா், முன்னாள் பேரூா் செயலாளா் சரவணன், துணை செயலாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தஞ்சை கலைமணி பாரதி, விஷாா் தமிழரசன் ஆகியோா் மொழிப்போா் தியாகிகளை நினைவுக் கூா்ந்து பேசினா். இதில், ஒன்றிய அவைத் தலைவா் ராயப்பன், பொருளாளா் வெங்கட்ராசு, மாவட்டப் பிரதிநிதிகள் தீனதயாளன், ஆறுமுகம், ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் முத்து, மொழிப்போா் தியாகி சீனிவாசன், முன்னாள் அரசு வழக்கரைஞா் கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேட்டூா், சதுரங்காடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மேட்டூா் நகர திமுக செயலாளா் கோ.காசிவிஸ்வநாதன் வரவேற்றாா். சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவா் பா.கோபால், சேலம் மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள், மேட்டூா் நகர அவைத்தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் ஜஸ்டின்வில்பா்ட், அரசப் அலி,சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளா் குடியரசி கீதா, மேட்டூா் நகர மன்ற முன்னாள் தலைவா் கந்தசாமி, கொளத்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் மிதுன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.