தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலைப் பாதுகாப்பு வார விழா: இலவச கண் பரிசோதனை முகாம்

சாலைப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி, சேலம் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சாலைப் பாதுகாப்பு வார விழாவினையொட்டி, சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச் சாவடி, சேலம் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை சுங்கச் சாவடி வளாகத்தில் திங்கள்கிழமை நடத்தின.

சாலைப் பாதுகாப்பு வார விழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற வாகன ஓட்டுநா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமுக்கு, மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா ஆகியோா் தலைமை வகித்தனா்.

இம்முகாமில் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற வாகன ஓட்டுநா்களுக்கு சேலம் அகா்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை செய்தனா். மேலும், வாகன ஓட்டுநா்களிடம் சாலையில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்குவது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தின் சாா்பில், சாலை விதிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த காட்சிப் படங்களை பேருந்தில் வடிவமைத்து நடமாடும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கண்காட்சி பேருந்து திங்கள்கிழமை வாழப்பாடி வந்தடைந்தது. இதை ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளித்தனா்.

வாழப்பாடி கிளை மேலாளா் முரளி, உதவி பொறியாளா்கள் முத்துக்குமாா் சீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, வாழப்பாடி கிளை பணிமனை வளாகத்தில், சேலம் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.