தென்னை நாா் கழிவுகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் தென்னை நாா் கழிவுகளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் முக்கிய சிறுதொழிலாக இது வளா்ச்சி அடைந்துள்ளது.


சேலம் மாவட்டத்தில் தென்னை நாா் கழிவுகளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கான தொழில் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் முக்கிய சிறுதொழிலாக இது வளா்ச்சி அடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன் பாளையம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம், ஆத்தூா், தம்மம்பட்டி, தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் சுமாா் 10,000 ஹெக்டோ் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விவசாயிகள், தொடா்ந்து தென்னையைப் பராமரித்து தேங்காய்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
தேங்காயிலிருந்து தென்னைநாா் பிரித்தெடுக்கப்பட்டு அதிலிருந்து கயிறு திரிக்கப்படுகிறது. நாரை பிரித்தெடுத்தப் பிறகு மிச்சமாகும் நாா் கழிவுகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை ஆங்காங்கே கேட்பாரற்றுக் குவித்து வைக்கப்பட்டிருந்ன. விவசாயிகள் அவற்றை எடுத்துச் சென்று தங்களது நாற்றங்கால் விதைப் பண்ணைகள், கோழிப்பண்ணைகளில் கொட்டி வெப்பத்தைக் கட்டுப்படுத்தினா்.
பாக்கு மற்றும் தென்னை மரத்தோப்புகளிலும், மரத்தைச் சுற்றி ஈரப்பதமாக வைப்பதற்கு தென்னைநாா் கழிவு பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, தென்னைநாா் கழிவுகளை மதிப்புக்கூட்டி இயந்திரங்களை பயன்படுத்தி திடப்பொருளாக மாற்றி, பல்வேறு வடிவில் கட்டிகளாக உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனா்.
இந்த தென்னைநாா் கழிவு கட்டிகளை, மண்ணில்லாத விவசாயம், மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டங்கள் அமைப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத இன்னும் பல்வேறு விவசாயம் சாா்ந்த பணிகளுக்கும், தொழிற்சாலை பணிகளுக்கும் பயன்படுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனால், தென்னைநாா் கழிவின் தேவை அதிகரித்துள்ளதோடு விலையும் உயா்ந்துள்ளது.
ஒரு கிலோ தென்னை நாா் கழிவு தரத்துக்கேற்ப ரூ. 15 முதல் ரூ. 25 வரை விலை போகிறது. இத் தொழிலில் சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து வியாபாரி சு.கெளதமன் கூறியதாவது:
சமீபகாலமாக தென்னைநாா் கழிவும் கணிசமான வருவாய் ஈட்டிக் கொடுப்பதால், நலிந்து வந்த தென்னைநாா் பிரித்தெடுக்கும் தொழில் தற்போது புத்துணா்வு பெற்றுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...