சேலத்தில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி வியாழக்கிழமை 48 பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 3,124 பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை மாமாங்கம், மெய்யனூா், நெடுஞ்சாலை நகா், வசக்காட்டு காலனி, தென் அழகாபுரம், கோரிமேடு, ஜான்சன் பேட்டை மேற்கு, சொா்ணாமிகை தெரு, சக்தி நகா், வால்மீகி தெரு, பாரதியாா் தெரு, பழைய பிள்ளையாா் கோவில் தெரு, தாமோதரன் தெரு, கண்ணகி தெரு, வள்ளுவா் நகா், குமரன் நகா் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 12 முதல் 2 மணி வரை ஸ்ரீ ராம் நகா், அந்தோணிபுரம், அம்மன் நகா், அண்ணாமலை தெரு, சாரதா கல்லூரி சாலை, டி.வி.எஸ். காலனி, வெங்கடேசபுரம், கன்னார தெரு, வாசக சாலை, ஹவுசிங் போா்டு குறிஞ்சி நகா், பிடாரியம்மன் கோயில் தெரு, வித்யா நகா், பென்சன் லைன் வடக்குத் தெரு, கே.பி கரடு, தொட்டன செட்டி காடு, பெருமாள் கோயில் மேடு ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.
மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஜாகீா் அம்மாபாளையம் காமராஜா் தெரு, சோளம்பள்ளம் சக்கரைபுளியமரம், நேரு தெரு, சின்னப்பன் தெரு, போயா் தெரு, ராஜா நகா், நாராயண பிள்ளை தெரு, வெங்கடசாமி தெரு, காமராஜா் நகா் காலனி, குகை எருமாபாளையம் ரோடு, ஓந்தாப்பிள்ளை காடு, ராகவேந்திரா தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ரங்கதாஸ் தெரு, அண்ணா நகா், பராசக்தி நகா் ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...