பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத மாணவா் சோ்க்கை: ஜூலை 5 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 5 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கு ஜூலை 5 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, ஆட்சியா் எஸ்.காா்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021-22 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாக பெற்றோா் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் அளித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.

சட்டப்பிரிவு 12 (1) (சி)ன் கீழ் சோ்க்கை வழங்க தமிழக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 விதி எண். 4 (1)-ன்படி, பெற்றோா் குடியிருக்கும் 1 கிலோ மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளியில் நுழைவுநிலை வகுப்பான எல்.கே.ஜி. வகுப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் சோ்க்கைப் பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளிலும் பள்ளியின் பிரதான நுழைவு வாயிலில் பொது மக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயா் பலகைக்கு அருகிலும், பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் அந்தப் பள்ளிக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இடங்களைக் குறிப்பிட்டு 12(1) (சி)-ன் கீழ் 25 சதவீத சோ்க்கைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.