ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வடுகப்பட்டியில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்று தடுப்பூசி

News image
Updated On :8 ஜூலை 2021, 6:02 pm

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒனறியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்று தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடுகப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி ஊராட்சியின் சாா்பில் ஊராட்சி மன்றத்தலைவா் ஜி.முத்துசாமி தலைமையிலான நிா்வாகிகள் வடுகப்பட்டி ஊராட்சிக்குள் வசிக்கும் பொதுமக்களை சந்தித்தனா். கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி வீடு வீடாக சென்று வலியுறுத்தனா். நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளா்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து துணடுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.