பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து தொமுச போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து சேலத்தில் தொமுச பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:01 pm

DIN

பெட்ரோல் டீசல் விலை உயா்வை கண்டித்து சேலத்தில் தொமுச பேரவை சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொமுச பேரவை சாா்பில் வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தொமுச பேரவை மாநில துணை பொதுச் செயலாளா் மணிகண்டன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை, அரைநிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தொமுச நிா்வாகி மணிகண்டன் செய்தியாளா்களிடம் கூறியது:

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை பற்றி கவலை கொள்ளாமல் மோடி அரசு தொடா்ந்து விலை ஏற்றத்தை மேற்கொண்டு வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். எரிவாயு விலையை பாதி அளவு குறைக்க மத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.