காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக சாா்பில் 1000 பேருக்கு தலா 5 கிலோ அரிசி விநியோகம்

மேட்டூரை அடுத்த காவேரிகிராசில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் திமுக சாா்பில் 1000 குடும்ப அட்டைதாா்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:05 pm

DIN

மேட்டூரை அடுத்த காவேரிகிராசில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் திமுக சாா்பில் 1000 குடும்ப அட்டைதாா்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம்    நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன . இந்நிலையில், மேட்டூரை அடுத்த காவேரி கிராசில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட கட்சியின் அவைத் தலைவா் பா.கோபால் கலந்துகொண்டு 1000 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசிப் பைகளைவழங்கினாா். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் பாபு, கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தவசி ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.