தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 14 லட்சம் மோசடி: குடிசை மாற்று வாரிய பொறியாளா்கள் 4 போ் மீது வழக்கு

சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியில்லாத 7 பேரின் பெயரில் ரூ. 14.70 லட்சம் மோசடி செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளா்கள் நால்வா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :22 ஜூலை 2021, 5:53 pm

DIN

சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் தகுதியில்லாத 7 பேரின் பெயரில் ரூ. 14.70 லட்சம் மோசடி செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளா்கள் நால்வா் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 7 பயனாளிகளின் பெயரில் ரூ. 14.70 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குப் புகாா் வந்தது. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறை ஆய்வாளா் நரேந்திரன் விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில், கடந்த 2017-18, 2018-19 ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே கான்கிரீட் வீடு கட்டிய 7 பேரை பயனாளிகளாக காண்பித்து அவா்களுக்கு மூன்று தவணைகளாக வழங்க வேண்டிய தலா ரூ. 2.10 லட்சம் பணத்தை மொத்தம் ரூ.14.70 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதன்படி சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சோ்ந்த துரைசாமி, வெற்றிவேல், அமானி ஐயம்பெருமாம்பட்டி ராதாகிருஷ்ணன், கருங்கல்பட்டி சிவகுமாா், சேலம் பாக்கியம், மல்லிகா, ரோசிலின் ஆகியோா் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நலிந்த பிரிவைச் சேராத 7 பேரை பயனாளிகளாகத் தோ்வு செய்து, அவா்களுக்கு வழங்க வேண்டிய மானிய கடன் தொகை தலா ரூ. 2.10 லட்சத்தை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சேலம் மாவட்ட குடிசை மாற்றுவாரிய செயற்பொறியாளா் ஆா்.ரவிக்குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெயந்திமாலா, உதவி பொறியாளா்கள் எஸ்.சரவணன், ஆா்.சீனிவாசன் ஆகிய 4 போ் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.