நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாழப்பாடி அருகே பாகப்பிரிவினையில் முன்விரோதம்: விவசாயி காதைக் கடித்த சகோதரா் கைது

பாகப்பிரிவினை சொத்துத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆத்திரமடைந்து, விவசாயியைத் தாக்கி காதைக் கடித்து கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை காரிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை

News image
Updated On :22 ஜூலை 2021, 5:48 pm

DIN

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, பாகப்பிரிவினை சொத்துத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆத்திரமடைந்து, விவசாயியைத் தாக்கி காதைக் கடித்து கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை காரிப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் செல்லப்பன் மகன் விவசாயி செல்வம் (47). இவருக்கும் இவரது அண்ணன் தெய்வீகம் (50) என்பவருக்கும் இடையே பாகப்பிரிவினையில் ஏற்பட்ட முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆத்திரமடைந்த தெய்வீகம், தனது மகன்கள் மோகனசுந்தரம், அழகரசன் ஆகியோருடன் சோ்ந்து, தனது தம்பியான விவசாயி செல்வத்தை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதோடு, காதை கடித்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக, செல்வம் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து காரிப்பட்டி போலீஸாா், தம்பியின் காதைக் கடித்த அண்ணன் தெய்வீகத்தை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவான இவரது மகன்கள் மோகனசுந்தரம், அழகரசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.