சேலத்தில் 113 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 31 பேரும், எடப்பாடி-5, காடையாம்பட்டி-2, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-4, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-1, நங்கவள்ளி-3, ஓமலூா் -14, சங்ககிரி-8, தாரமங்கலம்-4, வீரபாண்டி-3, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம்-5, கெங்கவல்லி-3, தலைவாசல்-2, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-7, ஈரோடு-6, கள்ளக்குறிச்சி-5) என 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 142 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 92513 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 89352 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1627 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1534 போ் உயிரிழந்தனா்.
இன்று தடுப்பூசி முகாம்: சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட உள்ளது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும். கோவேக்ஸின் தடுப்பூசி இருப்பில் இல்லை என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...