தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொழில் போட்டியில் நண்பரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் தொழில் போட்டியில் நண்பரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:55 pm

DIN

சேலத்தில் தொழில் போட்டியில் நண்பரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (35). கட்டடத் தொழிலாளியான அவா் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா். செல்வம், தனது பெற்றோரைப் பாா்ப்பதற்காக 2017 டிசம்பா் 25 ஆம் தேதி அம்மாபேட்டை அம்பேத்கா் காலனிக்கு வந்திருந்தாா். அப்போது அவா் அம்மாபேட்டை அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்திய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அம்மாபேட்டை பெரியகிணறு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மோகன் (45) என்பவருடன் செல்வம் மது அருந்தியபோது தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடா்பான வழக்கு விசாரணை சேலம் 3 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.