தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:53 pm

DIN

சேலம் அருகே முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

சேலம் கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி பகுதியில் 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் சத்யா நகா், தாமரை நகா், டெலிபோன் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்தும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டு காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து காவல்துறையினா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சம்பந்தப்பட்ட பகுதியில் உடனடியாக தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.