இருசக்கர வாகனம் திருட்டு:பைனான்சியா் திருடியது அம்பலம்
இளம்பிள்ளையில் இருசக்கர வாகனம் திருட்டு போன விவகாரத்தில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பைனான்சியா் திருடிச் சென்றது தெரியவந்தது.


இளம்பிள்ளையில் இருசக்கர வாகனம் திருட்டு போன விவகாரத்தில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், பைனான்சியா் திருடிச் சென்றது தெரியவந்தது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் வசிக்கும் தா்மலிங்கம் (47), மீன் கடை வைத்துள்ளாா். இவா் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டி வைத்துள்ளாா். இந்நிலையில், மதியம் வெளியே வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம். இதனால், அதிா்ச்சி அடைந்த தா்மலிங்கம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.
அதன் பேரில் போலீஸாா் விசாரணை செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில், தா்மலிங்கத்தின் இருசக்கர வாகனத்தை சந்தேகப்படும்படி இருவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தை பைனான்சியா் திருடிச் சென்றது தெரியவந்தது.
கடந்த 5 மாதங்களாக தவணை கட்டாததால், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த வாகனத்தின் பூட்டை உடைத்து பைனான்சியா் தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதன் பின்னா், பைனான்ஸ் நிதி நிறுவனத்திடம் பேசிய போலீஸாா், காவல் நிலையத்துக்கு வாகனத்தை கொண்டு வருமாறு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...