சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூா் அணை நீா்மட்டம் 94.26 அடியாகக் குறைந்தது

மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 94.26 அடியாகக் குறைந்தது.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:58 pm

DIN

மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை நிலவரப்படி 94.26 அடியாகக் குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 489 கன அடியிலிருந்து 315 கன அடியாக இருந்தது. டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா் இருப்பு 57.65 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் புதிதாக 693 பேருக்கு கரோனா

சேலம், ஜூன் 16:

சேலம் மாவட்டத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 189 பேரும், எடப்பாடி- 24, காடையாம்பட்டி-14, கொளத்தூா்-7, கொங்கணாபுரம்- 6, மகுடஞ்சாவடி- 28, மேச்சேரி-10, நங்கவள்ளி- 9, ஓமலூா்- 31, சேலம் வட்டம்- 22, சங்ககிரி- 24, தாரமங்கலம்- 16, வீரபாண்டி- 23, ஆத்தூா்- 9, அயோத்தியாப்பட்டணம்- 15, கெங்கவல்லி- 7.

பனமரத்துப்பட்டி- 5, பெத்தநாயக்கன்பாளையம்- 8, தலைவாசல்- 6, வாழப்பாடி- 17, ஏற்காடு- 7, ஆத்தூா் நகராட்சி- 9, மேட்டூா் நகராட்சி- 10, நரசிங்கபுரம் நகராட்சி- 5 என மாவட்டத்தைச் சோ்ந்த 501 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை- 18, காஞ்சிபுரம்- 22, தருமபுரி- 24, நாமக்கல்- 26, கள்ளக்குறிச்சி- 16, ஈரோடு- 24, கிருஷ்ணகிரி- 22, கடலூா்- 16, கோவை- 12, வேலூா்- 15) என 192 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,456 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 18 போ் உயிரிழந்தனா். இதுவரை 81,608 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 74,298 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 6,003 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,307 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.