சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நுண்ணீா் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

மேச்சேரி வட்டாரத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனம் அமைத்து பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:10 pm

DIN

மேச்சேரி வட்டாரத்தில் பிரதமரின் நுண்ணீா் பாசனம் அமைத்து பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேச்சேரி வட்டார வேளாண்துறை உதவி இயக்குநா் இரா. சுஜாதா வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மழைநீா், கிணற்று நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்காக பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு100 சதவிகித மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்திலும் சொட்டுநீா் பாசனக் கருவி, தெளிப்பு நீா் கருவி மற்றும் மழைத்தூவான் ஆகியவை அமைத்து தரப்படும்.

விவசாயிகளுக்கு டீசல் பம்ப் செட் அல்லது மின்மோட்டாா் நிறுவ 50 சதவிகித மானியம் அதிகபட்சமாக ரூ. 15,000 வரை வழங்கப்படுகிறது. பைப் லைன் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10,000, தரைநிலை நீா்தேக்கத் தொட்டி கட்ட ரூ. 40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். மேச்சேரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 140 ஹெக்டேரில் நுண்ணீா் பாசனக் கருவிகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

     சொட்டுநீா் பாசனம் அமைக்க விருபம்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை , ஆதாா்அட்டை, வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் சிறு, குறு விவசாயி சான்று, நில வரைபடம் ஆகிய ஆவணங்களுடன் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தையோ அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மைஅலுவலா்களையோ அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.