பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய மருத்துவா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

‘மருத்துவா்கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற வலியுறுத்தி சேலத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

‘மருத்துவா்கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற வலியுறுத்தி சேலத்தில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருத்துவமனைகள் மீதும், மருத்துவா்கள் மீதும் தாக்குதல் நடப்பதைத் தடுக்கவும், மருத்துவா்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, இந்திய மருத்துவா்கள் சங்கம், சேலம் கிளை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் பிரகாசம் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பாலமுருகன், ராஜேஷ், ரங்கநாதன், மணிவண்ணன், லோகநாதன், சந்திரசேகரன், வள்ளிநாயகம் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா். அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது மருத்துவா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவா்கள் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.