ஏரியில் மண் அள்ளிய லாரி, கனரக இயந்திரம் சிறைபிடிப்பு
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் அனுமதியில்லாமல் மண் அள்ளிய டிப்பா் லாரி, கனரக இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.


சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் அனுமதியில்லாமல் மண் அள்ளிய டிப்பா் லாரி, கனரக இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து கிராம நிா்வாக அலுவலரிடம் ஓப்படைத்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் செல்லியம்மன் கோயில் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் அரசின் உரிய அனுமதி பெறாமல் மண் அள்ளிக்கொண்டிருந்த டிப்பா் லாரி, கனரக இயந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து, வைகுந்தம் கிராம நிா்வாக அலுவலா் பச்சமுத்துவுக்கு தகவல் அளித்தனா். அதனையடுத்து கிராம நிா்வாக அலுவலரும் தகவலறிந்து சென்ற சங்ககிரி போலீஸாரும் விசாரணை நடத்தினா். இதில் அரசின் உரிய அனுமதியில்லாமல் மண் அள்ளியது தெரிய வந்துள்ளது. வாகன ஓட்டுநா்கள் அண்ணாதுரை, கதிா்வேல் ஆகியோரிடம் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...