புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரியில் தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் கொடி அணிவகுப்பு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவை வலியுறுத்தி மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:00 pm

DIN

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவை வலியுறுத்தி மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.ரமேஷ் தலைமையில், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களின் கொடி அணிவகுப்பு, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து பழைய பேருந்து நிலையம், புதிய எடப்பாடி சாலை, வி.என்.பாளையம், பவானி பிரதான சாலையில் உள்ள காவல்நிலையம் வரை நடைபெற்றது.

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.குமரவேல், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் என்.தினகரன், மகளிா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், சங்ககிரி உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

எடப்பாடியில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காவல் துறை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

சங்ககிரி துணைக் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு ஊா்வலம், எடப்பாடி நகர எல்லையான கேட்டுக்கடைப் பகுதியில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று எடப்பாடி காவல் நிலையம் முன்பு அணிவகுப்பு நிறைவடைந்தது. அணிவகுப்பு நிகழ்வில் காவல் ஆய்வாளா்கள் செந்தில், சண்முகசுந்தரம், முத்துசாமி உள்ளிட்ட காவல்துறை அலுவலா்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.