பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் 11 தொகுதிகளுக்கு 5,142 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலத்தில் 5,142 வாக்குச்சாவடி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:59 pm

DIN

சேலத்தில் 5,142 வாக்குச்சாவடி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 4,280 வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளில் தோ்தல் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்துவதற்கு 20 சதவிகித கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்துவதற்காக ஆட்சியா் அலுவலக இருப்பு அறையில் 7,246 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,265 கட்டுப்பாட்டுக் கருவிகள், 5,756 அளித்துள்ள வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் (விவிபேட்) தயாா் நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆட்சியா் அலுவலகப் பாதுகாப்பு வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் பாரத் மின்னனு நிறுவனப் பொறியாளா்கள் மூலம் முதல் நிலை சரிபாா்த்தலுக்கு உள்படுத்தப்பட்ட பின்பு தோ்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

பொதுத் தோ்தலுக்குப் பயன்படுத்த தயாா் நிலையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 20 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,142 கட்டுப்பாட்டுக் கருவிகள், 34 சதவீத கூடுதல் ஒதுக்கீட்டுடன் 5,740 தாம் அளித்த வாக்கினை சரிபாா்க்கும் கருவிகள் (விவிபேட்) மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படுகிறது.

மேலும் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாதுகாப்பு வைப்பு அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணிநேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) என்.தமிழரசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) தியாகராஜன், தனி வட்டாட்சியா் (தோ்தல்கள்) சிராஜுதீன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.