புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சங்ககிரியில் ரூ. 95 ஆயிரம் பறிமுதல்

சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணகளின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:59 pm

DIN

சங்ககிரி அருகே உள்ள நாகிசெட்டிப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணகளின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 95 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரி பறக்கும் படை அலுவலா் வி.மூா்த்தி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் பி.திருமுருகன், காவலா்கள் ஆா்.தங்கமணி, பி.தங்கராஜ் ஆகியோா், சங்ககிரி, ஆா்.எஸ்ஸில் இருந்து நாகிசெட்டிப்பட்டி செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனா். அதில் அந்த நபா் உரிய ஆவணங்களின்றி ரூ. 95,400 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பறக்கும் படையினா் ரூ. 95 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்தனா்.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டியைச் சோ்ந்த ராஜவேல் என்பதும், பஞ்சா் கடை வைத்துள்ளாா் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சங்ககிரி தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பனிடம் பறக்கும்படையினா் ஒப்படைத்தனா். வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா் உடனிருந்தாா். உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு தோ்தல் அலுவலா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.