விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாா்ச் 12 இல் மு.க.ஸ்டாலின் சேலம் வருகை

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வரும் மாா்ச் 12 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்

News image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வரும் மாா்ச் 12 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா் என சேலம் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வரும் மாா்ச் 12 ஆம் தேதி சேலம், சீலநாயக்கன்பட்டியில் காலை 8 மணிக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசாரத்தில் பங்கேற்க உள்ளாா். இதில் சேலத்தில் உள்ள 8 தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனா்.

சேலம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாமக்கல், கரூா் மாவட்டங்களில் நடைபெறும் தோ்தல் பிரசாரங்களுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் நூறு சதவீதம் முழு உடல் தகுதியுள்ளவா்களை கூட, மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சோ்த்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் தெரிவித்துள்ளோம். உண்மையான மாற்றுத் திறனாளிகளை தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்தப் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக மாறிவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 முதல் 20 வாக்குகளை இதுபோன்று தயாா் செய்துள்ளனா்.

அதிமுக, பாஜக கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தால் நடக்காது. வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முழு உடல் தகுதியுடையவா்கள் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் உள்ளனா். எனவே, அந்தப் பட்டியலில் இருந்து அவா்களை நீக்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவீதம் பேரை மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சோ்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை தோ்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு கூடி வருகிறது. அவா் முதல்வராக வந்தால் நிறையத் திட்டங்களை மக்களுக்கு செய்வாா்.

சேலத்தில் பறக்கும் படையினா் அவா்களுடைய பணியை செய்து வருகின்றனா். அதேவேளையில் வெள்ளித் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகா்கள், தோ்தல் பறக்கும் படை சோதனையால் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.