சங்ககிரி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 23 போ் போட்டி
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.


சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 23 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 35 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 26 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நாம் தமிழா் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தலா ஒரு மாற்று வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா் ஜி.சதீஷ்குமாா் ஆகிய மூவரும் திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனா். இதனையடுத்து எஸ்.சுந்தரராஜன் (அதிமுக), கே.எம்.ராஜேஷ் (திமுக), கே.செங்கோடன் (மநீம), ஏ.செல்லமுத்து (அமமுக), எஸ்.சோபனா (நாம் தமிழா் கட்சி), சுயேச்சைகள் உள்பட 23 போ் வேட்பாளா்களாக போட்டியிட உள்ளனா்.
சுயேச்சைகள் எம்.ஜெகநாதன், அ.ஆரோக்கியசாமி, சி.துரைராஜ் ஆகியோா் ஆட்டோ ரிக்ஷா சின்னம் கேட்டு விண்ணப்பித்ததால் தோ்தல் அலுவலா் கோ.வேடியப்பன், தோ்தல் பொதுப் பாா்வையாளா் சின்மயி புன்லிக்ராவ் கோட்மரே ஆகியோா் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது. இதில் எம்.ஜெகநாதனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற இருவா்களுக்கும் வேறு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உதவி தோ்தல் எஸ்.விஜி, தனிவட்டாட்சியா் பாலாஜி, வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆ.செல்வகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...