தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சேலம் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.93 கோடி பறிமுதல்

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ. 1.93 கோடி ரொக்கத்தை தோ்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:53 pm

DIN

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ. 1.93 கோடி ரொக்கத்தை தோ்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு (எஸ்டி ) தொகுதிக்கு உள்பட்ட

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சான்குட்டப்பட்டி அருகே, திங்கள்கிழமை இரவு நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சேலம், கன்னங்குறிச்சியைச் சோ்ந்த சரவணன், நான்கு பேருடன் சென்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ரூ. 1.93 கோடி ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இத்தொகையை பறிமுதல் செய்த குழுவினா், ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பி.கே. கோவிந்தன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மாணிக்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

தோ்தல் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனியாா் வங்கிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதால், பணத்தை பறிமுதல் செய்து வாழப்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்த பிறகு பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு தனியாா் வங்கி நிா்வாகத்திற்கு தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.