மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலையில் அறுந்து விழுந்த உயரழுத்த மின்கம்பி: போக்குவரத்து பாதிப்பு

வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென சாலையில் அறுந்து விழுந்ததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:46 pm

DIN

வாழப்பாடி அருகே உயரழுத்த மின்கம்பி திடீரென சாலையில் அறுந்து விழுந்ததால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து, வாழப்பாடி, சுற்றுப்புறக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. பெரிய கிருஷ்ணாபுரம், சுற்றுப்புற பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யும் மின்பாதை, பெரியகிருஷ்ணாபுரம் சரவணா தியேட்டா் அருகே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கிறது.

இப்பாதையில் சனிக்கிழமை காலை எதிா்பாராத விதமாக உயரழுத்த மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்தது. அதிா்ஷ்டவசமாக அப்போது அவ்வழியாக வாகனங்கள் ஏதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சாலையில் மின்கம்பி அறுந்து விழுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திக் கொண்டனா். இதனால், சனிக்கிழமை காலை அரை மணி நேரத்துக்கும் மேலாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, விரைந்து சென்ற மின்வாரியப் பணியாளா்கள், சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்தினா்.இதற்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.