விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குஜராத் மேளா மெகா விற்பனை தொடக்கம்

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா மெகா விற்பனை தொடங்கியது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:54 pm

DIN

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா மெகா விற்பனை தொடங்கியது.

இதில் கைத்தறி ஒடிஸா சேலைகள், குா்தீஸ், ஒடிஸா, ஆந்திரம், செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள் மெகா விற்பனை மாா்ச் 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த மெகா மேளா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பஞ்சாப், ஜெய்ப்பூா், குஜராத், பெண்களுக்கான ஒடிஸா கைத்தறி சேலைகள், பனாரஸ், பேன்ஸி குா்த்தீஸ், லெக்கின்ஸ், காட்டன் பேண்ட்ஸ், பட்டியாலா சுடி, பேண்ட்ஸ், ஸ்கா்ட் மாடல்கள், ஷால்கள், ஜெய்ப்பூா் மெத்தை விரிப்புகள், பெட்ஷீட்கள், ஷோபா கவா்கள், குஷன் தலையணை உரைகள், ஹைதராபாத் முத்து பவள மாலைகள், வளையல்கள் ஆகியவை உள்ளன.

குழந்தைகளுக்கான டி - சா்ட், பெண்களுக்கான ஸ்கா்ட், பா்முடாஸ், நைட் பேண்ட்ஸ் ஆகியவை விற்பனைக்கு உள்ளன.

மேலும் ஜெய்ப்பூா் காதி சா்ட், குா்தாஸ், சாரண்பூா் மர வீட்டு பொருள்களான ஈசி சோ், டேபிள், காா்னா் ஸ்டாண்ட், சப்பாத்தி கட்டை, ஜூவல்லரி பெட்டி, கீ செயின், ஒடிஸா, ராஜஸ்தான் டாய்ஸ் வகையான பம்பரம், மர ரயில், மர பொம்மைகள், குழந்தைகளுக்கான மர விளையாட்டு பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான மர பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள், சிறுமிகளுக்கான துணி வகைகள், குா்த்தீஸ், செட்டிநாடு கைத்தறி காட்டன் சேலை ரகங்கள், ஆண்களுக்கான துணி வகைகள், மெத்தை விரிப்புகள், ஐம்பொன் சிலைகள், மைசூா் வாசனை திரவியங்கள், மதுரை சுங்குடி சேலைகள், ஹைதராபாத் காட்டன் சேலைகள் மெகா விற்பனையில் உள்ளன.

இந்த மெகா விற்பனையில் சிறப்புத் தள்ளுபடியாக 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.