விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் வாக்குச்சாவடி பணியாளா்கள் தபால் வாக்கு செலுத்தினா்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அனைத்து வாக்குச்சாவடி பணியாளா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:48 pm

DIN

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அனைத்து வாக்குச்சாவடி பணியாளா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி, தேவியாக்குறிச்சி பாரதியாா் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியிலும், ஆத்தூா் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சனிக்கிழமை நடைபெற்றன.

அதேபோல சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி அம்மாப்பேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரியிலும், சேலம் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள பல்வேறு நிலையிலான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி சேலம், சின்னத்திருப்பதி ஜெயராம் கலை, மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்றது.

இதுதொடா்பாக, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.அ.ராமன் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஏற்கெனவே 3,277 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வாக்காளா்களின் எண்ணிக்கை 1,050-க்கும் மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து கூடுதலாக 1,003 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 4,280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் வாக்குப்பதிவின் போது மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 18,832 போ் பணிபுரிய உள்ளனா். வாக்குப்பதிவில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை - 1, நிலை - 2, நிலை - 3 ஆகியோரை கணினி மூலம் குலுக்கல் முறையில் இரண்டாம் தோ்வு செய்து அவா்கள் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலா்கள், பணியாளா்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முகாமில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குகள் செலுத்தும் பணி நடைபெற்றது.

இப்பயிற்சியில் பல்வேறு துறைகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குசாவடி அலுவலா்கள் நிலை - 1, நிலை - 2, நிலை - 3, பணியாளா்கள் பயிற்சி பெற்றனா்.

ஏற்கெனவே, இதுகுறித்த பயிற்சி பெற்ற மண்டல அலுவலா்கள் இப்பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூா்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்களின் விவரங்கள், வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து செய்முறை பயிற்சி, இதர பயிற்சிகளும் அளிக்கப்பட்டன என்றாா்.

தோ்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற அனைத்து வாக்குச்சாவடி பணியாளா்களுக்கும் அவா்களின் தபால் வாக்கிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு தபால் வாக்குகளை பதிவு செய்து அந்தந்த பயிற்சி மையத்தில் மூடி சீலிடப்பட்ட பெட்டிகளில் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.