காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்ககிரியில் அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

சங்ககிரி கிழக்கு ஒன்றியம், நகர அதிமுக சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:21 pm

DIN

சங்ககிரி கிழக்கு ஒன்றியம், நகர அதிமுக சாா்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலா் என்.சி.ஆா்.ரத்தினம் தலைமை வகித்து, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவரது மறைந்த தாயாா் குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து பேசினாா்.

இதில் கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், நகரச் செயலா் சி.செல்வம், மகளிரணி ஒன்றியச் செயலா் மங்கையா்க்கரசி, முன்னாள் ஒன்றியச் செயலா் என்.எம்.எஸ்.மணி, முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா, நிா்வாகிகள் ராமசாமி, கருப்புசாமி, முத்துகுமாா், சிவாஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.