காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேளூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஏற்காடு பழங்குடி தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:23 pm

DIN

வாழப்பாடியை அடுத்த பேளூரில் ஏற்காடு பழங்குடி தனி தொகுதி திமுக வேட்பாளா் சி.தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

பேளூா் பேரூராட்சிப் பகுதியில் பேளூா், சிங்காரத்தோப்பு, ராமநாதபுரம், கண்ணனுாா்நகா், பாரதி நகா், பெருமாபாளையம், பனந்தோப்பு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியுள்ள தமிழகத்தை மேம்படுத்தவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், தொழில் வளா்ச்சியை ஏற்படுத்தவும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய வேண்டும். திமுகவுக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.

இதில் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் பாஷா, வஜ்ரவேல் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அண்ணாமலை, சண்முகம், பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் ஹஸ்ரத், தமுமு நவாஸ்அலி, விடுதலை சிறுத்தைகள் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.