விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் அதிமுகவினா் போராட்டம்

சேலத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:22 pm

DIN

சேலத்தில் திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தினா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து, சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக மகளிா் அணி சாா்பில் மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பகுதி செயலாளா் யாதவமூா்த்தி, சரவணன், முருகன், மகளிா் அணி செயலாளா் ஜமுனா, மாநகர மாவட்ட அவைத் தலைவா் பன்னீா் செல்வம் ஆகியோா் பங்கேற்றனா்.

அதேபோல சேலம் நான்கு சாலையில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் பாசறை செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தாதகாபட்டி பகுதியில் மாவட்ட பொருளாளா் பங்க் வெங்கடாசலம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அதேபோல முதல்வரின் தாயைப் பற்றி தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து அம்பேத்கா் மக்கள் இயக்க மாநிலத் தலைவா் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.