சங்ககிரி: சாலைகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் 

சங்ககிரியிலிருந்து சேலம்-பவானி பிரதான சாலைகளில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். 
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் திங்கள்கிழமை வெள்ளை வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள்.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் திங்கள்கிழமை வெள்ளை வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்கள்.

சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து சேலம்-பவானி பிரதான சாலைகளில் வெள்ளை வர்ணம் பூசும் பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். 

தமிழக அரசு மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதனையடுத்து சங்ககிரி நகர்பகுதியில் மளிகை, காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருந்தன. 

வங்கிகள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடின. இதனையடுத்து சங்ககிரி நகர் பகுதியில் சேலம்-பவானி பிரதான சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர்கள் வெள்ளை நிற வர்ணம் பூசும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com