சங்ககிரியில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சங்ககிரி உள்கோட்ட காவல்துறை சார்பில் சங்ககிரியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சங்ககிரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சங்ககிரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சங்ககிரி உள்கோட்ட காவல்துறை சார்பில் சங்ககிரியில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி சங்ககிரி உள்கோட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்கள் பொதுமுடக்கத்தையொட்டி வீட்டில் உள்ளடங்கி இருக்க வேண்டும், அவசியமான பணிகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து சமூக இடைவெளியுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப செல்ல வேண்டுமென விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  

சங்ககிரி, சந்தைப்பேட்டையிலிருந்து எமதர்மன் வேடமணிந்த நபர் மேளங்கள் இசைக்க சங்ககிரி பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்நிகழ்ச்சியை சங்ககிரி உள்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர் பி.ரமேஷ் தொடக்கி வைத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகக்கசவம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கி கரோனா தொற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றவேண்டுமென வலியுறுத்தினார். சங்ககிரி காவல் ஆய்வாளர் எஸ்.குமரவேல் உள்ளிட்ட பல்வேறு காவல்துறையினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com