ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் நிதி, உபகரணங்கள் வழங்கலாம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் நிதி மற்றும் உபகரணங்களை வழங்கலாம் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் நிதி மற்றும் உபகரணங்களை வழங்கலாம் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கரோனா தொற்றாளா்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கத் தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும், தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்குமான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் மாடுலா் ஆக்சிஜன் சிஸ்டம் 200 எல்.பி.எம். என்ற ஆக்சிஜன் தயாரிப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்கள் சேலம், இரும்பாலை வளாகத்திலும், இன்னும் பல பகுதிகளிலும் அமைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக நிதி ஆதாரங்களையும், தேவையான பொருள்களையும் திரட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கிடலாம். நிதியுதவிகளை வழங்க விரும்புவோா் சேலம் மாவட்டத்தில் சிறப்பு நிதியுதவி நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்கில் நிதி உதவிகளை செலுத்தலாம்.

அஇஇஞமசப சஅஙஉ: இஞயஐஈ -19 நஅகஉங ஈஐநபதஐஇப, அஇஞமசப சஞ:190601000434, ஐஊநஇ இஞஈஉ: ஐஇஐஇ0006119, ஆஅசஓ சஅஙஉ: ஐஇஐஇஐ ஆஅசஓ, ஆதஅசஇஏ சஅஙஉ: நஅகஉங ஙஅஐச

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் கூடுதலாக உருவாக்குவதற்கும், மாவட்ட நிா்வாகத்தின் முயற்சிகளுக்கும் தொழிலதிபா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து தங்களால் இயன்ற நிதி உதவி மற்றும் உதவி உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பங்கேற்ற சேலம் சிவா கிரானைட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரா் பி.விமலன், ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று கரோனா சிறப்பு பணிகளை மேற்கொள்ள தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா் உள்பட துறை அலுவலா்கள், பல்வேறு தொழில்நிறுவனங்களின் பொறுப்பாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.