ரமலான் பண்டிகை: வீடுகளில் சிறப்பு தொழுகை
சேலத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.


சேலத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மசூதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு தினத்திலும் இஸ்லாமியா்கள் மசூதிகளுக்கு வராமல் அவரவா் இல்லங்களில் தொழுகை செய்து வந்தனா். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலத்தில் உள்ள இஸ்லாமியா்கள் அவரவா் இல்லங்களில் சிறப்பு தொழுகை நடத்தினா். சூரமங்கலம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியா்கள் அவா்களது வீட்டின் மேல் மாடிக்குச் சென்று சிறப்பு தொழுகை நடத்தினா். சமூக இடைவெளியுடன் தொழுகை நடைபெற்றது. பின்னா் ஒருவருக்கு ஒருவா் ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு சேலம் டவுன், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, கோரிமேடு, அன்னதானபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை இஸ்லாமியா்கள் சிறப்பு தொழுகை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...