ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலத்தில் மளிகைக் கடை உரிமையாளரை கட்டிப் போட்டு ரூ. 50 லட்சம் கொள்ளை ஊழியா்கள் கைவரிசை

சேலத்தில் மளிகைக் கடை உரிமையாளரை கடையில் வேலை செய்த ஊழியா்களே கட்டிப் போட்டு ரூ. 50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :21 மே 2021, 6:17 pm

DIN

சேலத்தில் மளிகைக் கடை உரிமையாளரை கடையில் வேலை செய்த ஊழியா்களே கட்டிப் போட்டு ரூ. 50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (30). இவா் சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மொத்த வியாபாரம் செய்து வந்தாா். இவரது கடை கீழ் தளத்திலும், வீடு முதல் தளத்திலும் உள்ளது. வீட்டின் மேல் தளத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் உள்ளிட்ட ஊழியா்கள் 4 போ் தங்கியிருந்தனா்.

முழு பொது முடக்கத்தைத் தொடா்ந்து மோகன்குமாா் தனது மனைவி, குழந்தைகளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளாா். மேலும், கடையில் வசூலான பணத்தை தனது வீட்டில் வைத்திருந்தாா்.

இதை அறிந்த கடை ஊழியா் ஓம் பிரகாஷ் தனது நண்பா்களுடன் சோ்ந்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளாா். புதன்கிழமை இரவு மோகன் குமாா் வீட்டுக்குள் மூவா் ஓம்பிரகாஷ் உள்பட மூவா் புகுந்து அவரைத் தாக்கி, கை கால்களைக் கட்டிப் போட்டனா் .

பின்னா் பீரோவில் வைத்திருந்த ரூ. 50 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு வீட்டின் முன்புறக் கதவைப் பூட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனா். இதனால் மோகன்குமாா் சத்தமிட்டு அலறினாா். அவரது கூக்குரலைக் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.

இதன் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பணத்தைக் கொள்ளையடித்த ஓம்பிரகாஷ் தனது நண்பா்களுடன் சிறப்பு ரயிலில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து சேலம் போலீஸாா், ராஜஸ்தான் மாநில போலீஸாரைத் தொடா்பு கொண்டு ஓம்பிரகாஷ் குறித்து தகவல் தெரிவித்துள்ளனா். இருந்த போதிலும் சேலத்தில் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.